போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! – ராமகிருஷ்ணன்

poangadi-neengalum-unga-kadhalumபல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் M.A.ராமகிருஷ்ணன். (எஸ்.ராமகிருஷ்ணன் இல்லீங்க..நல்லா ஏமாந்தீங்களா?)

கதாநாயகிகளாக மனம்கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயபிரகாஷ்,இமான் அண்ணாச்சி,சாமிநாதன்,சென்ராயன் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவினர்கள்..ஒளிப்பதிவு  M.V.பன்னீர்செல்வம்; இசை – கண்ணன்; பாடல்கள் – அண்ணாமலை; எடிட்டிங் – வசந்த் அய்யப்பன்; கலை – மோகன்; நடனம் – பாஸ்கர்; தயாரிப்பு நிர்வாகம் ; மார்ட்டின்-பாண்டியன்; தயாரிப்பு மேற்பார்வை -செந்தில்; தயாரிப்பு – கே.ஆர்.கண்ணன்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி நடிக்கும் M.A.ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டோம். இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு.எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்ன ஒன்றுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க ..பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்தறாங்க அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிறார் M.A.ராமகிருஷ்ணன்..

மொத்தத்தில் இருபாலரையும் பார்த்து போங்கடா… போங்கடி.. உங்க போங்காட்டம் தெரியும் என்கிறார் இயக்குனர். போங்கடி.. வரட்டும் பாக்கலாம்.