சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம்.

santhanam-nambiyar-movie

 நண்பனுக்குப் பின் பாகன் சரியாகப் போகாவிட்டாலும் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அவரது அடுத்த படமாக தொடங்க இருக்கிறது நம்பியார். அறிவியல் களம் சார்ந்த முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில்  ஸ்ரீகாந்த் – சந்தானம் -சுனைனா நடிக்க  கணேஷா இயக்குகிறார்.ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப் படம் என்றே குறிப்பிடுகிறார்.

தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே… பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது என  நம்பியார் அவர்களின் மகன் மோகனை படக்குழுவினர் அணுகி அனுமதி கேட்டபோது, ” நீங்கள் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள்” என தாராளமாக அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும் ஸ்ரீகாந்திற்கு தெரிவித்தார் என்று நெகிழ்கிறார் இயக்குனர்.

எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் அவர். முதலில் நம்பியாரை புக் பண்ணிவிட்டீர்களா என்று கேட்பாராம் மக்கள் திலகம். “சைன்ஸ் பிக்ஷன் எனப்படும் அறிவியல் கதையாதலால் இந்தப் படத்தின் கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகமுக்கிய தொடர்பு இருக்கும். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். .” என்கிறார்

நம்பியார் படத்துக்கு இன்னொரு பலம் இன்னொரு ஹீரோவாக வரும் சந்தானம் . கதையைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிக பட்ச தேதிகளை ஒட்டுமொத்தமாக வழங்கியிருக்கிறார்.  சுனைனா ஹீரோயினாக நடிக்கிறார். பிரபல இயக்குனர் ராஜ மௌலியிடம் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயன்ஸ்  பிக்சன் படம்.

விஜய் அண்டனி நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதாக மறுத்துவிட்டவர் கதைக்கான களம் பார்த்தவுடன் ஆர்வமாக தானே இசையமைக்கிறேன் என ஒப்புக்கொண்டு பாடல்கள் கம்போஸிங்கில் இப்போது இருக்கிறாராம். நடிக்கும் மற்ற நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், சுப்பு, ஜான் விஜய், தேவ தர்ஷினி,  ஸ்ரீரஞ்சனி. காமெராவை எம்.எஸ்.பிரபு கையாள, விவேக் ஹர்ஷா எடிட்டிங் செய்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை பயிற்சி தர, தயாரிப்பு நிர்வாகம் செய்கிறார் சின்னதுரை. தயாரிப்பு வடிவமைப்பு விமல்.