ராஜா ராணிக்கு ஜீ.வீ.ப்ரகாஷ் இசை

raja-rani-movie-audio-news

பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இயக்குனர் முருகதாசின் ஏ.ஆர்.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘ராஜாராணி ‘ படத்தின் ஒரு பாடலை சென்ற வாரம் வெளியிட்டார்கள். .ஜீ.வீ.பிரகாஷ் இசையில் , பா விஜய் பாடல் வரிகளில் விஜய் பிரகாஷ் -சாஷா பாடிய ஒரு 

வேகமான பாடலொன்றை டீஸர் போல் வெளியிட்டார்கள்.

ஆர்யா – நயன்தாரா, ஜெய் -நசிரியா என்று இரு ஜோடிகள் நடிக்கும் இப்படத்தில் ஜெய்யுக்கு வித்தியாசமான நெகட்டிவ் ரோல் போல் தெரிகிறது.  மேலும் சத்யராஜ், சந்தானம் மற்றும் சத்யன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். சந்தானத்தின் காமெடி படத்திற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு ஜீ.வி.ப்ரகாஷை தேர்வு செய்திருக்கிறார். இதில் இயக்குநரின் தேர்வும் இருக்கலாம்.  ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பன்னாட்டு நிறுவன முதலாளி போல ஆகியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. பாக்ஸ் ஸ்டார் போன்ற பெரும் நிறுவனங்களுடன் கூட்டு சேரும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார்.

ஆனால் இந்த வளர்ச்சியால் தமிழ் சினிமாவிற்கு அவர் எதைப் பெற்றுத் தரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியாய் வளர்ந்து நிற்கும் ஷங்கர் செய்யாததையா இவர் தமிழ் சினிமாவிற்கு செய்துவிடப்போகிறார் ? போங்க பாஸ் எல்லாம் அவிங்கஅவிங்க வயிறு நெறஞ்சா சரிதான்.

ஜீ.வீ. ப்ரகாஷோட பாட்டு எதிர்பார்த்த அளவு ஹிட்டாகலியாமே. உண்மையா ?