காதல்.. ஆசை..காமம்.. ஒரு கானகம்

anu-haassan-stars-in-kaanagam-movie

ஹீரோ காலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு தொடர் ஓட்டமாக ஓடும் ‘அஃகு’ படத்தை இயக்கிய மாமணி அப்பட ஐடியாவால் பாராட்டப்பட்டாலும் படமாக்கும் விஷயத்தில் பிரமிக்கும்படி இல்லை. அவர் மறுபடி முயற்சி செய்யும் படம் தான் கானகம்.

கதை சுருக்கமாக கேட்கும் போது நன்றாய்த் தானிருக்கிறது ஆங்கிலப்பட கதைபோல. ஒரு கோடீஸ்வரப் பெண் தன் தோழியின் திருமணத்திற்காக காரில் செல்கிறாள். வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தித் தங்கும் அவளை அங்கே மூன்று ஆண்கள் பார்க்கிறார்கள். ஒருவன் அவள் மேல் காதல் கொள்கிறான். இன்னொருவன் அவள் அணிந்திருக்கும் விலையுயர்ந்த நகையின் மேல் ஆசை கொள்கிறான். மூன்றாமவனோ அவள் மேல் காமம் கொள்கிறான்.

அந்த மூன்றுபேரும் அவளைத் துரத்துகிறார்கள். ஒரு காட்டு வழியே செல்லும் அவள் அவர்களிடம் மாட்டிக்கொண்டாளா ? அவர்களின் முடிவு என்ன ஆனது என்பது தான் கதை. கிருஷ்ணன் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா ஒரு ஏர்ஹோஸ்டஸ்ஸாக பணிபுரிந்தவராம். ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து செல்லும் கானகம் ஒரு த்ரில்லர் படம்.

‘காபி வித் அனு’ புகழ் அனுஹாசன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறாராம். அவர் நடிப்பதாலோ என்னவோ கதையை காபி ஷாப்பில் ஆரம்பிக்கிறார்களாம். இப்படத்திற்காகவே லண்டனிலிருந்து வந்து தனது பகுதிகளை நடித்துக் கொடுத்தாராம் அனு.  இயக்குனரின் முந்தைய படமான அஃகுவில் ஒரு பாம்ப் ஸ்குவார்ட் ஆபீஸராக நடித்திருக்கிறார் அனுஹாசன்.

கானகத்திற்குள் கதை பெரும்பாலும் நடப்பதால் ‘லைஃப் ஆப் பை’ யில் வந்த கிராபிக்ஸ் புலி மாதிரியே  ஒரு கிராபிக்ஸ் சிறுத்தை வருகிறதாம். படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாமணி.
கதை வித்தியாசமான த்ரில்லர் போலத் தெரியுது மாமணி. உங்கள் பட உருவாக்கமும் அது போல த்ரில்லாக இருக்குமா?  பார்ப்போம்.