மன்னார் வளைகுடாவில் கஞ்சா

mannaar-valaikuda-movie-news

தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டு பேர் சூழல்களால் மாற்றப்பட்டு இங்குள்ளவர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம் பற்றி கற்றுக் கொடுக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது. ஏன் ? என்பதைப் பற்றிய படம் தான் ‘மன்னார் வளைகுடா’.

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லக்ஷயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறார்கள். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜெர்ஸி பேக்ஸ் ஆலன் மற்றும் சந்திரா லூயிஸா ஆகியோர் வெளிநாட்டு தம்பதியினராக நடிக்கிறார்கள்.
அமி மகேந்திரா, காவேரி, சாம்ஸ் போன்றோரும் நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் புதிய அறிமுகமான தனசேகரன்.

படத்தின் பெயருக்கேற்ப படம் முழுவதும் மன்னார் வளைகுடாவில் நடப்பது போலவே கதை இருக்கிறதாம். மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த கடல்பகுதிகளிலேயே பெரும்பாலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம். பாம்பன் பாலத்தில் கூட சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தினார்களாம்.

இதை எல்லாம் சொன்னவர் படத்தில் கஞ்சா கருப்புவின் ரோல் என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.