சிவப்பாய் மிளிரும் மக்கயலா மஞ்சுரி

sivappu-rupa-manjari

நான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த மக்கயலா புகழ் மஞ்சுரி தற்போது சிவப்பு என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மேக்கப் இல்லாமல் கறுத்த உருவமாக இலங்கை அகதியாக நடிக்கிறாராம் இவர்.  படத்திற்காக ஸ்டில்களில் மேக்கப்பே போடாமல்

தோன்றினாலும் அசத்தலாய் சிரிக்கிறார் ரூபா.

சினிமாவுக்கு வந்த கடந்த ஆறு வருடங்களில் மொத்தம் மூன்றே படங்களில் தான் நடித்திருப்பதாகவும் அந்த மூன்றாவது படம் தான் சிவப்பு என்றும் கூறுகிறார். அதைப் பற்றி கவலைப்பட விரும்பவில்லையாம் அவர்.

அழகுப் பொம்மையாக மட்டுமே ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதை சமீபத்தில் தான் உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடித்த போது தான் ஒவ்வொரு நாளும் இரவில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வந்தது. நாளைக்கே எனக்கு குழந்தை பிறந்தால் அது என்னைப் பார்த்து ‘ஏம்மா இந்த மாதிரி படத்துலே நடிச்சே’ன்னு என்னைப் பார்த்து கேட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

இது வீம்புதான். ஆனால் இந்த வீம்பு தான் எனக்குப் பிடிக்கிறது. எனக்கான சரியான இடத்தை அடைய இந்த மாதிரி முயற்சிப் படங்களில் நடிப்பதில் தவறில்லை. இந்தப் படத்தில் கட்டிடத் தொழிலாளியாக நடித்திருக்கும் என்னை ஒரு நிஜ கட்டிடத் தொழிலாளியாகவே நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டர் தளத்தில் எழுதியிருக்கிறாராம் அம்மணி.

நல்ல எண்ணம் தான்.