தயாநிதி தயாரிக்கும் புதிய படம் என்.ஹெச்.5

jai-acts-in-daya-alzagiri-movie-news

தயாநிதியின் மீகா என்டர்டெய்ன்மண்ட் தயாரிப்பில் வந்த உதயம் என்.ஹெச்.4 படம் வந்த என்.ஹெச்.4 சாலை வழியாகவே ஓடிவிட்டது. சித்தார்த் நடிப்பில் வந்த இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் தயாநிதி அழகிரிக்கு தயாரிப்பாளர் என்கிற வகையில் பெயரைக் கெடுத்துவிடவில்லை.

இப்போது அடுத்ததாக தயா.அழகிரி தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கதாநாயகியை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் ஒரு காமெடி கலந்த த்ரில்லர் படமாம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறதாம். படத்திற்கு இசை ‘கொலவெறி’ அனிருத்.  எடிட்டிங் பிரவீன்-ஸ்ரீகாந்த், கலை இயக்குனர் ராமலிங்கம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சரவணராஜன்.  இவர் வெங்கட் பிரபுவிடம் கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இத்தோடில்லாமல் சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, சரோஜா, கந்தசாமி, யாருடா மகேஷ் போன்ற படங்களில் நடன இயக்குனராகவும் இருந்திருக்கிறாராம்.(அண்ணன் பிரபுதேவாவின் வழியில்..).

படத்திற்கு இன்னும் பெயரே வைக்காததால் ஒரு பெயர் வைத்துப் பார்த்திருக்கிறோம். பெயர் பிடிச்சிருந்தா  சின்னதா சர்வீஸ் சார்ஜ் அமௌண்ட் 5 லட்ச ரூபா எண்ணி வெச்சுட்டு பெயரை வாங்கிக்குங்க  தயா.அழகிரி.