கூலிக்கு வேலை செய்யும் கொலைகாரன்

raja-scores-misskin-movie

இதுவரை வித்தியாசமான படங்களாக எடுத்து கொஞ்சம் நல்லபேரும் சம்பாதித்திருக்கும் மிஷ்கின் அடுத்து எடுக்கவிருக்கும் த்ரில்லரின் பெயர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. இப்படத்திற்கு இளையாராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம் மிஷ்கின்.

ஆனால் முந்தைய படத்தில் வேலை செய்தபோது மிஷ்கின் மேல் வருத்தமாக இருந்த இளையராஜா அவரிடம் பேசவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். ஆனாலும் மிஷ்கின் விடாமல் ஸ்டூடியோவை விட்டுப் போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாராம். அதனால் சமாதானமடைந்த ராஜா அவரைக் கூப்பிட்டு படத்தின் கதையைக் கேட்டாராம்.

கதையை மிஷ்கின் சொன்னவிதத்தில் திருப்தியாகி இளையராஜா படத்துக்கு இசையமைக்க சம்மதித்து, “படத்தில் எத்தனை பாட்டுக்கள்” என்று கேட்க அதற்கு மிஷ்கின் படத்தில் பாட்டுக்களே இல்லை என்றாராம். இளையராஜா பின் எதற்காக என்னிடம் வந்தாய் என்று கேட்டாராம். படத்திற்குப் பிண்ணனி இசை முக்கியம் என்பதால் உங்களிடம் வந்தேன் என்று மிஷ்கின் சொன்னதைக் கேட்டுவிட்டு சிரித்தபடியே தலையாட்டினாராம் இளையராஜா. நந்தலாலாவுக்குப் பின் மீண்டும் மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார் ராஜா.

கூலிக்கு வேலை செய்யும் கொலைகாரனைப் பற்றியது இப்படம். மிஷ்கின், ஸ்ரீ, 6 வயது குழந்தை சைதன்யா ஆகியோர் நடிக்கின்றார்கள். மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் மீண்டும் தானே இயக்கி நடிக்கிறார். படத்தில் ஹீரோயினே இல்லையாம்.  சே என்ன படம் பாஸ்.. கொஞ்சம் கூட குளுகுளுன்னு இல்லாம.