மீண்டும் மிரட்ட வருகிறது பீட்சா – 2

pitza-2-the-villa

பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது ‘தி வில்லா’ என்கிற த்ரில்லர். நாளைய இயக்குநர் குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற தீபன் இப்படத்தை இயக்குகிறார்.

பீட்சா படத்தில் வரும் ஒரு காட்சி இப்படத்தின் தொடக்கமாக கதை ஆரம்பிக்கிறது. அசோக் செல்வன், சஞ்சீதா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். பிரெஞ்சுப் படப் பாணியில் உருவாகிறதாம் இப்படம்(??).

படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடிப்பதையும் அவரது கேரக்டரையும் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம் படிப்பிடிப்புக் குழுவினர். இப்படத்தில் அமானுஷ்ய சக்திகள் பல கொண்டவராக வித்தியாசமான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என்று நள்ளிரவு ஆந்தைச் செய்திகள் கூறுகின்றன.

புதிதாக ஹீரோ வாய்ப்புக்கள் வராததால் தானே நடித்து, இயக்கி அத்துடன் இ(ம்)சையும் அமைத்துக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா அவரது ‘இசை’ படத்துக்கு. இசைக்கு நடுவில் இப்படம் முடியும் வரை கொஞ்ச நாள் லீவு விட்டுவிட்டாராம். நல்ல காரியம் செஞ்சீங்க சூர்யா.