சிம்புவுக்கும் ஹன்சிம்புகாவுக்கும் சம்திங் சம்திங் ?

simbu-hansika-in-love-news

வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் நடித்தார்களோ இல்லையோ அன்றிலிருந்து மீடியாக்கள் இரண்டுபேருக்கும் இடையே ‘இது’ என்று கிளப்பி விட இரண்டு பேரும் தடாலடியாக அதை மறுத்தே வந்திருக்கிறார்கள்.

நெருப்பில்லாமல் மீடியாவில் புகை வராது என்பது உண்மையாவது போல் ட்விட்டரில் ஹன்சிகா நான் எஸ்.டி.ஆருடன் நட்பாக இருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

சிம்பு அதை ஆமோதிக்கும் விதமாக “ஆம். எனக்கும் ஹன்சிகாவுக்குமிடையே சம்திங் சம்திங் தான். அதை திருமணமாக்க எங்க குடும்பத்தினர் தான் முடிவு செய்யவேண்டும்” என்று மகா அடக்கமாக பதில் ட்விட்டியிருக்கிறார்.

வாலுவில் தான் இவர்கள் காதல் வால்பிடித்தது போல்த் தெரிகிறது. ஒரு வருடமாக இருவரும் பழகி வருகிறார்களாம். நடுவில் ஏதோ கொஞ்சம் பக்கம் காணாமல் போக சிம்பு காசி, கயா என்று சுற்றித் திரிந்து சிம்பானந்தாவாக அருள் வாக்குகள் பல சொல்லவாரம்பித்தார். எல்லாம் ஹன்சிகா என்கிற முக்தி கிடைக்காததால் வந்த விரக்தி என்று பலருக்கும் தெரியவில்லை.

பலரும் அவர் ரஜினி 60ல் தேடியதை சிம்பு 25ல் தேடிக் கிளம்பிவிட்டார் என்றே நம்பிவிட்டார்கள். கடைசியில்  ஹன்சிகா அம்மனின் அருள் பெற்றவுடன் மீண்டும் சிம்பானந்தா லௌகீக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டிருக்கிறார் என்று ஆன்மீக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாவம் தமிழக ஆன்மீக பக்தக் கேடிகளுக்கு ஸாரி கோடிகளுக்கு ஒரு சிம்பானந்தா கிடைக்காமல் போய்விட்டார்