எஸ்.ஜே.சூர்யாவின் ராஜா VS ரஹ்மான்

sj-surya-isai-movie-controversy

எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைத்து, நடித்து இயக்கிவரும் படம் ‘இசை’. இப்படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான பகையைப் பற்றியதாம். இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான் பாத்திரத்தில் வருகிறாராம். இவருக்கு எதிராக இளையராஜா பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்ததாம்.

படத்தின் கேரக்டர்கள் பெயர் கூட இளையராஜா, ரஹ்மான் பெயரைப் போலவே ஒலிக்கும் பெயர்களாக இருந்ததாம். இது என்னடா வம்பாய்ப் போயிற்று என்று பிரகாஷ்ராஜ் பாதியிலேயே விலகிவிட்டாராம்.  எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அலைந்து திரிந்து தேடி கதை சொல்லி இப்போது ஒரு வழியாக அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்திருப்பவர் சத்யராஜ்.

பிரச்சனைக்குரிய கதையை ஒன்லைனாக வைத்திருப்பதால் படத்தில் ஏதும் சிக்கல் வருமோ என்று பலரும் யோசிக்கிறார்களாம். எஸ்.ஜே.சூர்யாவுக்கு படத்தை விற்றேயாகவேண்டிய நிர்ப்பந்தம். இது போன்ற இல்லாத பிரச்சனைகளை ஊதியபடியே சென்றால் படத்துக்கு நிச்சயம் மார்க்கெட் ஏறும் என்பது அவருக்குத் தெரிந்திருக்காதா என்ன?