சுந்தர்.சியின் அரண்மனைக் கிளி

sundar-c-aranmanai-movie

தீயா வேலை செய்யனும் குமாரு தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் சூப்பர் ஹிட்டாகி பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டது. இதையொட்டி படத்தின் இயக்குநர் சுந்தர்.சியின் காட்டில் மழை தான். அடுத்து அவர் இயக்கும் படத்தை பெரிய அளவில் தயாரிக்க சில

புரொட்யூஸர்கள் ‘குனிய’ வந்துள்ளனர்.

சூட்டோடு சூட்டாக அடுத்த படத்துக்கான டிஸ்கஸ்ஸனில் தீவிரமாக இறங்கி விட்டாராம். படத்தின் பெயர் அரண்மனை. பெரிய பட்ஜெட் படமாகத் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு ஹீரோ ஹீரோயின்கள் இன்னும் ‘புக்’ செய்யப்படவில்லையாம் (நன்கு திறமை ‘காட்ட’த் தெரிந்த நடிகைகள் உடனே அனுகவும்). ஹீரோவாக நடிக்க இரண்டு பெரிய நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க முன்வந்துள்ளனராம்.

ஆனால் ரசிகர்களுக்கு சனி எப்படி வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்பதன் அறிகுறியாக சுந்தர்.சி யே மீண்டும் ஹீரோவாக நடிக்க முடிவு செய்திருப்பதாக வதந்திகள் நடமாடுகின்றன. தன்னுடைய அரண்மனையின் கிளியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறாராம்.

உன் தலையில தீ விழுந்து போச்சு கொமாரு..