ராமையா உ போட்டுத் தொடங்கும் ‘உ’

vu-movie-thambi-ramaiah-news

நம் வாழ்வின் பிரச்சனையான எல்லா தருணங்களையும் சமாளிக்க அளவு கடந்த அறிவு தேவையில்லை.  சமயங்களில் சின்ன சின்ன சாமர்த்தியங்களே போதும் என்பது தான் தம்பி ராமையா, ஆஷிக், செல்வா, வருண், நேகா ஆகியோர் நடிக்கும் ‘உ’ படத்தின் கரு.

அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத ஆரம்பிக்கும்பேது முதலில் உ என்று எழுதிப்பார்ப்பார்களாம். சுவடி நன்கு வளைந்தால் உ என்கிற எழுத்தும் எளிதில் எழுதப்படும். இல்லையென்றால் ஓலை கிழிந்துவிடும். உ என்பதன் இந்து மதப் பொருள் நல்ல தொடக்கம் என்பது.

இந்தப் படத்தில் வரும் எல்லா பாத்திரங்களும் தெரிந்தோ தெரியாமலோ வாழக்கையில் ஒரு விஷயத்தை முதல் தடவையாகச் செய்கிறார்கள்.  அதைக் குறிக்கவே ‘உ’ என்கிறார் இயக்குநர் ஆஷிக்.

தன்னால் செய்ய முடியாத ஒரு காரியத்தை நான்கு இளைஞர்கள் துணையோடு செய்ய நினைக்கும் தம்பி ராமையாவின் செயல்கள் தான் உ. அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து கூறும் படம் இது. தம்பி ராமையா சாட்டையில் இருந்து நல்ல குணச்சித்திர நடிகராகவும் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறார்.