அக்ஷய திரிதியை முதல் அஷய திரிதியை வரை

vennila-veedu-movie-news-mirchi-senthil

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் தம்பதியர் ஒரு அபார்ட்மெண்டில் குடியேறுகிறார்கள். அங்கு அவர்கள் வாழும் நகரத்துச் சூழல், மனிதர்கள், பழக்க வழக்கங்கள், நட்புகள், அனுபவங்கள் அவர்களே எதிர்பாராத அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. இது தான் வெற்றிவீரன் இயக்கும் ‘வெண்நிலா வீடு’ படத்தின் கதை.

இவர் ஏற்கனவே  அரும்புமீசை குறும்பு பார்வை என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தனது பெயரை வெற்றி மகாலிங்கம் என்று நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டு படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறாராம் இயக்குனர்.

ரேடியோ மிர்ச்சி செந்தில் தான் நாயகன். விஜயலெட்சுமி தான் நாயகி. ஒரு அட்சய திரிதியையில் வாங்கும் நகையானது அடுத்த அட்சய திரிதியைக்குள் மூன்று குடும்பங்களுக்கு கைமாறுகிறது. அதில் மனிதாபிமானம் எவ்வாறு கொல்லப்படுகிறது என்பது பற்றிய கதை இது. நகையின் மீதுள்ள ஆசை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அவலத்துக்குள்ளாக்குகிறது என்பதைப் பற்றியும் பேச இருக்கிறேன் என்கிறார் இயக்குனர்.

சார் ஒரு விஷயம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மக்களிடம் இல்லாத ஒரு பழக்கம் நம் ஊரில் இருக்கிறது. அது நகை என்கிற வடிவில் சேமிப்பு செய்வது. அது தான் இது போன்ற கடுமையான பொருளாதார வீழ்ச்சிக் காலங்களிலும் பல குடும்பங்களை தப்பிப் பிழைக்க வைக்கும் மைக்ரோ பொருளாதாராமாக இருக்கிறது. இதுவும் ஒரு யதார்த்தம் தான் சார்.