கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்

kvanand-dhanush-works-newmovie

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் தனது மாற்றானுக்குப் பின் இயக்க இருக்கும் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறார்கள். மாற்றான் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணைகிறார்கள்.

இவர்களுடன் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிப்போன ஹாரிஸ் ஜெயராஜூம் கூட்டணியில் இணைகிறார். கௌதம் வாசுதேவ மேனனுடன் ஏற்பட்ட பிரிவில் தற்போது கே.வி.ஆனந்த் மட்டுமே ஹாரிஸ் ஜெயராஜூக்கு கை கொடுப்பவராக இருக்கிறார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் தனுஷ். முதன் முதலாக கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ்ஷின் ஹிந்திப் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் ஒரு முக்கியமான நடிகராக உருமாறியிருக்கிறார்.  எனவே பெரிய இயக்குனர்கள் தனுஷ்ஷை வைத்து இயக்குவதை மீண்டும் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.