பாடகர்களுக்கு ராயல்டி சட்டம். இசையமைப்பாளர்கள் எதிர்ப்பு.

kafka-music-directors-singer-royalty-news

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனமயமாகிவிட்ட இசைத் தட்டுக்கள், ஆல்பங்கள் வெளிநாட்டில் பாடகர்களையும் இசைக்குழுவையும் சார்ந்தே இருந்து வருகின்றன.இசைக்குழுவும், பாடகர்களுமான இவ்வித அமைப்பில் பாடகர்களைச் சார்ந்து இசைத்தட்டுக்களின் விற்பனை நடைபெறுகிறது. இந்தியாவில் இதில் நுழைய முயலும் கார்ப்பரேட்டுகளுக்கு தடையாக இருப்பது இங்கிருக்கும் இசைத்தட்டு சந்தையின் இசையமைப்பாளர் சார்ந்த சார்பு நிலை

இந்தியாவில் இசைத்தட்டுக்கள் எப்போதும் இசையமைப்பாளரைச் சார்ந்தே விற்கும். இசையமைப்பாளரே இசைத் தொகுப்பில் துவங்கி, பாடகர்களை தேர்ந்தெடுப்பது வரை அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அவரது கலை உருவாக்கமே இசை ஆல்பமாக இருக்கும். சினிமாவுக்கான இசை ஆல்பங்களே பெரும்பாலும் வெளியாவதால் அவையும் பாடகர் சார்ந்து அல்லாமல் இசையமைப்பாளர் சார்ந்து இருக்கும். பாடகர் ஒரு பாடலை குறிப்பிட்ட ஒரு மணி அல்லது இரண்டு மணிநேரத்தில் வந்து பாடிவிட்டுப் போய்விடுவார். பாடலின் எந்த இசைபற்றியும் அவர் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த நிலையை மாற்றவும், பாடகர்களைச் சார்ந்து இந்திய இசையுலகம் இயங்கவும் முடிவு செய்த கார்ப்பரேட்டுகளின் சீரிய சிந்தனையின் விளைவாகத் தோன்றியதே மத்திய அரசின் பாடகர்களுக்கும் பாடலின் ராயல்டி உரிமையை வழங்கும் சட்டம். சமீபத்தில் கேரளாவில் பெப்கா என்கிற பெயரில் இசையமைப்பாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளனர். அதன் ஆரம்ப விழாவில் பேசிய பலரும் பாடகர்களுக்கான இந்த ராயல்டி சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

எனவே அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த சட்டத்தை மன்மோகன் சிங் உடனே வாபஸ் வாங்குவார் என்று நம்புங்கள். பெட்ரோல் விலை இனி கூடவே கூடாது என்று நினைப்பது போல இதுவும் கட்டாயம் நடக்கும்.