விஜய் சேதுபதிக்கு கிடைக்காத வெளிநாட்டு விசா.

idharkuAsaipBalakumara-newss

விஜய் சேதுபதியின் தொடர்ந்த வெற்றிகளில் கடைசியாக சூது கவ்வும் சேர்ந்தது. இப்போது மனிதர் பத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. ரௌத்ரம் படத்தின் இயக்குனர் கோகுல் இதை இயக்குகிறார்.

இவ்வளவு படங்கள் நடித்தாலும் இவை அனைத்தையும் இவர் கதை கேட்டு கவனமாகத் தேர்வு செய்த படங்களே. தனக்கு கொடுக்க கால்ஷீட் இல்லாத வேளையிலும் அவரைத் தேடி வரும் இயக்குனர்களிடம் 2 வருடம் காத்திருங்கள் என்று கூறாமல், கதையைப் பார்த்து தன்னைவிட கதைக்குப் பொருத்தமாகத் தோன்றும் நடிகர்களிடம் சென்று கதை சொல்லும்படி அன்போடு அனுப்பி வைக்கிறாராம்.

இவருக்கு மட்டும் இதுவரை வெளிநாடு சென்று ஷூட்டிங் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் இவரது இயக்குனர்கள் பெரும்பாலும் சீரியசாக கதையை மட்டுமே நம்பியிருப்பவர்களாயும், சும்மா தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு சென்று பாட்டு, டூயட் என்று தயாரிப்பாளர்களுக்கு வெடிவைக்காதவர்களாயும் இருப்பதால் தான்.இவரைக் கேட்டால் “நம்ம முகத்துக்கெல்லாம் கபாலி தோட்டமும், பட்டினப்பாக்கமுமே சரியாக இருக்கும். வெளிநாடெல்லாம் ஒத்து வராது போல. அதனால தான் இதுக்குள்ளேயே முடிச்சுடறாங்க பாஸ்” என்று சிரிக்கிறார்.

எதுக்கும் கமல் சார் கிட்டே கேட்டுப்பாருங்க விஜய். விஸ்வரூபம் பார்ட் – 2வில போஸ் கூட இன்னொரு வில்லன்னு உங்களைச் சேர்க்கச் சொன்னாலும் சொல்வாரு. ஹீரோ எப்பவும் அவரு மட்டும் தானே.