காஸ்ட்லியான கிடார்

angelina-jolie-maddox-guitar

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மூன்றாவது கணவர்தான் பிராட்பிட்.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏஞ்சலினா தனது இரண்டு மார்பகங்களையும் புற்று நோய்

ரிஸ்க் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக ஆப்பரேஷன் செய்து அகற்றிக் கொண்டார். அதன் பின்னரும் பிராட் பிட் இவருக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறார்.

இந்த ஜோடிக்கு சொந்தக் குழந்தைகள் மூன்றும் தத்து எடுத்தது மூன்றுமாக மொத்தம் ஆறு குழந்தைகள். தத்துக் குழந்தைகளை கம்போடியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாமிலிருந்து தலா ஒரு குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஏஞ்சலினா.

அவர்களில் கம்போடியாவிலிருந்து தத்தெடுத்து வளர்க்கும் மேடாக்ஸ்க்கு இப்போது பனிரெண்டு வயது ஆகிறது. அவனுக்கு கிடார் என்றால் பைத்தியமாம். அவனுடைய பிறந்த நாளுக்கு ஏஞ்சலினா ஒரு புதிய கிடார் வாங்கிக் கொடுக்க இருக்கிறார்.

இதிலென்ன ஆச்சரியம் ? இந்தக் கிடாரின் விலை ஆறாயிரம் டாலர்களாம். காஸ்ட்லியான மியூசிக் தாங்கோ.