வில்லியாகும் பக்குவம் இல்லை – ஸ்ருதி

shruthi-hassan-no-villain-news

கமலின் செல்லமகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் இறங்கினாலும் இறங்கினார், பரபரப்பில் அப்பாவை ஓவர்டேக் பண்ணுவார் போலத் தெரிகிறது. அதற்க்கேற்றார் போல் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பதை தனது பாணியாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘டி டே(D Day)’ என்கிற ஹிந்திப் படம் வெளியானது. அநதப் படத்தில் படு கிளாமராக ஒரு விலைமாதுவாக நடித்ததோடு ஒரு சூடான படுக்கையறைக் காட்சியிலும் நடித்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் ஸ்ருதி.

அடுத்து பிரபுதேவா இயக்கிவரும் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். வில்லியாக நடிக்கிறார் என்று முதலில் செய்திகள் வந்தன. ஆனால் அதை மறுக்கிறார் ஸ்ருதி. இந்தப் படத்தில் சிறிய கெஸ்ட் ரோல் போல இருந்தாலும் வித்தியாசமான ரோல் என்னுடையது.
ஆனால் அதே நேரம் இது வில்லி ரோல் அல்ல. வில்லியாக நடிப்பது மிகக் கடினமானது. அந்த அளவுக்கு நடிப்பு அனுபவம் எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார்.

வில்லி வேடமெல்லாம் ஆண்ட்டி ரோல் பண்ணும் வயதில் தானே தேடி வரும். தக்காளிப் பழம் மாதிரி இருக்கிற இந்த வயசில் அதெல்லாம் தரமாட்டாங்க. கவலைப்படாதீங்கோ ஸ்ருதியம்மா.