களமிறங்குது கமலின் அடுத்த வாரிசு

kamal-daughter-akshara-news

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராகத் தான் ஆரம்பத்தில் திரையுலகிற்கு வந்தார். பின்பு ஹிந்திப் பட உலகில் அறிமுகமாகி பாலிவுட்டை தற்போது கலக்கும் சூறாவளிகளில் ஒருவராக இருக்கிறார்.

அக்காவின் புகழ் இப்போது அவரது தங்கை அக்ஷராவுக்கும் சினிமாக் காய்ச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது போலும். சினிமா இயக்குனராகும் பட்டபடிப்பை படித்துக் கொண்டிருந்த அக்ஷரா தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லையென்றும் கேமராவுக்குப் பின்னிருந்து இயக்குனராவதே லட்சியமென்றும் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஸ்ருதியின் படங்கள் வரிசையாக ஹிட்டாகி அவர் பாலிவுட்டில் டாப் கதாநாயகி லெவலுக்கு வந்ததைக் கண்டு அக்ஷரா தானும் நடிக்க முடிவுசெய்துவிட்டார்.

உடனேயே அதற்கான வாய்ப்புக்கள் அவரைத் தேடி க்யூ கட்டி நிற்க ஆரம்பித்தன. மணிரத்னம் தனது படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார். தமிழ், தெலுங்கில் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால் அக்ஷராவோ ஸ்ருதியைப் போலவே பாலிவுட்டில் கண்ணாயிருந்ததால் எல்லா வாய்ப்புக்களையும் மறுத்துவிட்டார். அவர் எதிர்பார்த்தபடி ‘பா’ படத்தை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பால்கியின் அடுத்த ஹிந்திப் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருடன் இதில் ஜோடியாக நடிக்க இருப்பவர் தனுஷ்ஷாம். இத்துடன் அமிதாப்பச்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.