வேளச்சேரியில் என்கௌன்டர்கள்

velachery-movie-sarath-news

இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர்  நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.  மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற

என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே ‘வேளச்சேரி’ படமாக வளர்கிறது.

சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெசலிஸ்ட்டாக  நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித உரிமை ஆர்வலராக இருந்து கொண்டு என்கௌன்டரை எதிர்ப்பதும் சரத்குமார் ரௌடிகளைப் போட்டுத் தள்ளுவதுமாக கதை பின்னப்பட்டுள்ளது. என்கௌன்டர் விவாதங்களுக்கு வேளச்சேரி ஒரு தீர்வைச் சொல்லும் படமாக அமையும். மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் வேளச்சேரி படத்தில் சரத்தின் ஆக்க்ஷன் எப்பிசோடுகள் ஹாலிவுட்டுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிழல்கள் ரவி, சென்றாயன், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் நடிக்கின்றனர்.  பா. விஜய், விவேகா, சினேகன், கானா பாலா ஆகியோரின் வரிகளுக்கு தாஜ் நூர்  இசையமைக்கிறார். கலவரம், மகாபலிபுரம், ஐவர், பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் சந்திரன் காமராவைக் கையாள, பில்லா ஜெகன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். எடிட்டிங் தீபக் துவாரகநாத்தும்  செய்ய வசனம் எழுதுகிறார் சூதுகவ்வும் சீனிவாசன். கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் திருமலை வேந்தன்.  சிவம் மூவிஸ் சார்பாக தயாரிக்கிறார் எஸ். மணி.
 
சென்னை, கோவா ஆகிய இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.