‘அருந்தா பத்தி’

arundhapathy-new-movie

அருந்தாபத்தி என்கிற சைவசித்தாந்த தமிழ்ச் சொல்லுக்கு ‘சொல்லப்படும் சொல்லிலிருந்து வெளிப்படையாகச் சொல்லாத ஒரு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது’ என்று அர்த்தமாம். இதுதான் இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜின்வர்கீஸ் முதன்முதலாக இயக்கும் படத்தின் தலைப்பு.

பாரதியின் பாடல்களில் ‘உலகெல்லாம் ஒரு பெருங்கனவு’ என்று ஒரு பாடல் துவங்கும். அந்தப் பாடல் தான் படத்தின் திரைக்கதை எனலாம். நமக்கான வாழ்க்கை, உணவு, இருப்பிடம் என நாம் வாழும் வாழ்க்கையும் சூனியமாகிவிடும்போது தான் ‘என்னடா வாழ்க்கை இது’ என்கிற எண்ணம் தோன்றும். அது தான் படத்தின் திரைக்கதையாகியிருக்கிறது.

சாஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அருந்தாபத்தியில் விதார்த் ஹீரோவாக நடிக்க ஐஸ்வர்யா தத், தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.