கே.எஸ்.ரவிக்குமார் – 25

endrendrum-ravikumar-event

‘ரஜினி 25’ என்று ரஜினி சினிமாவுக்கு வந்து 25 வந்து வருடங்கள் ஆனதை ரஜினிக்கு 25 வயது ஆனதை கொண்டாடுவதுபோல பலவருடங்களுக்கு முன்பு கொண்டாடினார்கள். இப்போது இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள்

ஆனதையொட்டி ‘என்றென்றும் ரவிக்குமார்’ என்று ராஜ் டி.வி. சார்பில் சென்னையில் விழா நடத்தி கௌரவித்திருக்கிறார்கள்.

‘புரியாத புதிர்’ என்கிற த்ரில்லர் மூலம் அறிமுகமான ரவிக்குமார் சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து ,அவ்வை சண்முகி என்று வெள்ளி வி்ழாப் படங்கள் பலவற்றை இயக்கியவர். சிவாஜி கணேசன் முதல் விஜய், சூர்யா, சிம்புவரை இயக்கியிருக்கிறார். இவருக்கு கடந்த 4ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கமல், சரத்குமார், ரம்யாகிருஷ்ணன் போன்ற சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

வழக்கம் போல் ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் அப்புறம் திரையுலக பிரபலங்கள் ஒருவரையொருவர் ஆஹா ஓஹோவென புகழ்ந்துதள்ளும் புல்லரிப்புச் சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியிலும் உண்டு. கூடிய விரைவில் இதை ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பவும் இருக்கிறார்கள்.