nayanthara-action-role-news

பில்லா படத்திலும், பின்பு ஆரம்பம் படத்திலும் ஆக்ஷன் நாயகியாக துப்பாக்கி சகிதம் தோன்றிய நயன்தாராவுக்கு மீண்டும் ஆக்ஷன் வேடத்தில் தூள் பறத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது.

இயக்குனர் ராஜா இயக்க ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நயன்தாராவுக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். துப்பாக்கியால் எதிரிகளை வீழ்த்துவதோடு பறந்து பறந்து சண்டையும் போடுகிறாராம்.

நயன்தாரா தனது உடலை கவர்ச்சியான தோற்றத்திலிருந்து மிடுக்கான தோற்றத்துக்கு மாற்ற இதற்காகவே தொடர்ந்து ஜிம்முக்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதோடு சண்டைபோடுவது சம்பந்தமாக திறனை வளர்த்துக்கொள்ள ஸ்பெஷலாக மாஸ்டரிடம் சண்டை கற்றுக்கொள்கிறாராம்.

எனவே அவரைப் பற்றி ஏடாகூடமாக எதையாவது எழுதிச் ஜொள்ளும் நபர்களுக்கு ஓர் எச்சரிக்கை. நயனிடம் போலீஸ் அடி வாங்காமல் நீங்கள் தப்பிக்கவேண்டுமென்றால் அவருடைய கவர்ச்சிப் படத்தை நடுப்பக்கத்தில் போடுவதை உடனே நிறுத்திக்கொள்ளவும். இல்லாவிட்டால் லாக்கப்பில் கம்பி எண்ணவேண்டியது வரலாம். இங்கு நீங்கள் பார்க்கும் ஸ்டில் சைனீஸ் குஃங்க்பூ யோகா ஸ்டைலில் நயன் கொடுக்கும் போஸ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.