நடிகராகிறார் பிரபுசாலமன்

prabu-solomon-acts-news

இயக்குனர்களுக்கு நடிக்கவேண்டும் என்று அக்கரைப்பச்சை ஆசை வருவது ஹாலிவுட் சினிமாவில் கூட ஜகஜம். சேரன், மிஷ்கின், ராம் என்று சமீபத்திய இயக்குனர்கள் நல்ல நடிகர்களாகியதைத் தொடர்ந்து பிரபுசாலமனும் இப்போது நடிகராக இருக்கிறார்.

ஒரு பக்கம் புதுமுகங்களை வைத்து ‘கயல்’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இந்த கேப்பில் இயக்குனர் தளபதிராஜ் இயக்கும் ‘தவமின்றி கிடைத்த வரமே’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார்.
படத்தில் அந்தக் கதாபத்திரத்தின் அழுத்தமான தன்மை தனக்குப் பிடித்திருந்ததால் அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்தாராம்.

தளபதிராஜ் இதற்கு முன்பு ‘நம்ம அண்ணாச்சி’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். காதலன் திடீரென இறந்து போக காதலிக்கு அது இயல்பான மரணமல்ல என்பது தெரியவருகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்களே இந்தப் படமாம்.