யுவன் அடித்திருக்கும் செஞ்சுரி

yuvan-100th-film

பிரியாணி படம் யுவன் இசையமைத்த 100 வது படமாகும். பிரியாணி படம் வந்ததையொட்டி நெருங்கியவர்கள் பலர் தொடர்பு கொண்டு அவரை பாராட்டியிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘நூறு படங்களுக்கு இசையமைத்ததெல்லாம் ஒரு சாதனையே இல்லை.. என் அப்பாவோடு

ஒப்பிடுகையில் இதெல்லாம் சாதாரணம் என்று அடக்கமாய்ப் பேசுகிறார்.

இனி வருங்காலத்தில் இன்னும் புதுமையான விஷயங்களைக் கற்று இசையமைத்து இளையராஜாவின் மகன் இவர் என்று பெருமை தரும்படி வித்தியாசமான இசையைத் தரவேண்டும் அதுதான் என் ஆசை’ என்கிறார்.
இவர் பிரியாணி அன் கோவுடன் நட்பு பார்ட்டி ஆட்டங்களைக் குறைத்துக் கொண்டு கொஞ்சம் சீரியஸான உலக இசைவிஷயங்களை இன்னும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாரென்றால் போதும், நல்ல உயரங்களுக்குப் போவது நிச்சயம்.