ரவியின் கருத்தம்மா – 2

ennadhan-pesuvatho-movie-news

இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றி ‘ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கிய ரவி அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘என்ன்தான் பேசுவதோ’. விஜய்ராம், விக்னேஷ், சின்னச்சாமி போன்றோர நடித்திருக்கிறார்கள். படத்தின் கரு ஒரு பத்திரிக்கைச் செய்தியிலிருந்து உருவானது.

“பெண்குழந்தைகளை வறுமையினால் விற்கிறார்கள் என்கிற செய்தியை துரத்தி மேலும் ஆராய்ந்தபோது கிடைத்த விவரங்களால் பெரும் அதிர்ச்சியடைந்தேன். வறுமையின் காரணமாக பெற்ற பெண் குழந்தைகளை விற்பவர்களும் அதை வாங்கி வளர்த்து திரும்ப மறுவிலைக்கு விற்கும் தரகர்களும் உள்ளனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். அப்படி விற்கப்படும் ஒரு பெண் குழந்தை திரும்ப தன்னைப் பெற்றவர்களை தேடி வந்து சந்தித்தால் எப்படியிருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை தான் இந்தப் படம்” என்கிறார் படத்தின் இயக்குநர் ரவி.

ஆச்சார்யா படத்துக்குப் பின் நல்ல கதைக்காக படங்களே இயக்காமலிருந்த ரவி இந்தக்கதையைக் கொண்டு மீண்டும் களமிறங்குகிறாராம். பாரதிராஜாவின் கருத்தம்மாவை விட நல்லா எடுக்கமுடியுமா ? உங்களுக்குச் சவால்தான் ரவி.