ஜூலியா ராபர்ட்ஸின் 11 வருட காதல்

julia-roberts-danny-moder

ப்ரெட்டி உமன் ஜூலியா ராபர்ட்ஸ் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கிறார். அவரது குழந்தைகளான ஃபின்னஸ் மற்றும் ஹேசல் எனும் இரட்டையர்கள் மற்றும் ஆறுவயதான ஹென்றி ஆகியோரை கவனிப்பதில் முழுக்கவனம் செலுத்த விரும்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

அதன்படி கடந்த சில வருடங்களில் மிகக் குறைந்த படங்களிலேயே அவர் நடித்துள்ளார்.

46 வயதாகும் ஜூலியா தான் நடித்த படங்களை தன் குழந்தைகள் பார்க்க அனுமதிப்பதில்லையாம். சென்ற வருடம் வந்த ‘மிர்ரர் மிர்ரர்’ என்கிற குழந்தைகளும் பார்க்கக்கூடிய குடும்பப் படத்தைக் கூட அவர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அப்படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்தார். குழந்தைகள் தற்போது தான் அவர் நடிப்பது நிஜமல்ல அது ஒரு பணம் சம்பாதிக்கும் தொழில் என்பதைப் புரிய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் அதை நன்கு புரிந்தபின்னரே தான் நடித்திருக்கும் படங்களை பார்க்க அனுமதிப்பேன் என்கிறார்.

குழந்தைகள் மேல் இவ்வளவு பாசமாக இருக்கும் ஜூலியா தனது கணவரான டேனி மூடரின் மேல் அபரிதமாகக் காதல் கொண்டவராக இருக்கிறார். திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆனாலும் மூன்று குழந்தைகள் பிறந்தபின்பும் தனது கணவர் மேல் தனக்கு இருக்கும் காதல் தீரவேயில்லை, ஹனிமூன் தம்பதிகள் போலவே இப்போதும் காதலை உணர்கிறோம் என்கிறார் ஜூலியா.