வித்யாவின் கஹானியில் நயன்

kahani-remake-nayandhara

நயன்தாராவின் மார்க்கெட் பழையபடி சூடுபிடித்திருக்கிறது. ஹிந்தியில் கஹானி என்கிறபெயரில் வித்யாபாலனின் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் இது. இதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். அதில் வித்யாபாலனின் பாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா. படத்தில் வைபவ், பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரில் வெளியாகும் இப்படம் தமிழில் ‘அவள்’ என்ற பெயரில் வெளியாவதாக இருந்தது. அந்தத் தலைப்பை வேறு ஒரு நிறுவனம் ஏற்கனவே பதிந்துவைத்திருப்பது தெரியவந்ததால் ‘என் அன்பே நீ எங்கே’ என்று தற்காலிகமாக தலைப்பிட்டிருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் சேகர் கமுல்லாவிற்கு இந்தத் தலைப்ப பொருத்தமாநதாகத் தோன்றவில்லை.

திடீரென்று காணாமல் போய்விடும் தனது கணவரைத் தேடி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நயன். இங்கு அவரைத் தேடுவதும் அதையொட்டி நடக்கும் த்ரில்லான விஷயங்களே இந்தப்படம். படம் த்ரில்லர் ஆதலால் அதற்கேற்ற பொருத்தமான தலைப்பு பின்னர் வைக்கப்படும் என்கிறார்.