கஸ்தூரிராஜாவின் ‘காசு பணம் துட்டு’

kasu-panam-thuttu-movie-news

தனது பையன்களால் காசு பணம் துட்டு மணியை நன்றாகவே சம்பாதித்துவிட்ட கஸ்தூரிராஜாவுக்கு மீண்டும் படமெடுக்கும் ஆசை வந்திருக்கிறது. அவரது கடைசி இரண்டு படங்களும் செல்வராகவன் எடுத்தவை என்று சொல்வார்கள். இந்தப் புதிய படத்தின் பெயர் ‘காசு பணம் துட்டு’.

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு முகம் இருக்கிறது. ஒரு பகுதியில் செல்வத்தின் செருக்கில் வாழ்பவர்கள் நிறைந்திருக்க மற்றொரு பகுதியில் வறுமையின் கோரப்பிடியில் வாழ்பவர்கள் நிறைந்திருக்க, காசு மற்றும் போதையால் வேண்டாத வாழ்க்கையை நோக்கி பலர் பயணித்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட முரண்பாடுகள் தான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா.

வழக்கம்போல மித்ரன், நசீர், பாலா, ஸ்ருதி படேல் போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பிரபுவும் ராதிகாவும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சென்னை, கேரளா மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.