திரைக்கதையை மாற்றுவதற்கு ‘அஞ்சான்’

lingusamy-anjaan-news

லிங்குசாமி நீண்டநாட்களாக எடுத்து வரும் படம் ‘அஞ்சான்’. சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை மூன்றாவது தடவையாக மாற்றியிருக்கிறாராம் லிங்கு.

” சூர்யாவை என்படத்தில் நடிக்கவைக்க நீண்ட நாட்களாகவே முயன்றுவந்தேன். ‘ஆனந்தம்’ படத்தில் அப்பாஸ் நடித்திருக்கும் பாத்திரத்திற்கு முதலில் சூர்யாவைத்தான் தேர்வு செய்திருந்தேன். அதேபோல் விஷால் நடித்த சண்டைக்கோழியின் கதையை சூர்யாவை மனதில் வைத்தே எழுதியிருந்தேன். ஆனால் அப்போது அவர் நடிக்கும் சந்தர்ப்பங்கள் தவறிப்போயின. இது சூர்யாவிடம் நான் சொன்ன நான்காவது கதை.

படத்தின் திரைக்கதை மாறியபோதும் சூர்யாவும், சமந்தாவும் மாறவில்லை. காரணம் முதல்கட்டப் படப்பிடிப்பின்போது சமந்தாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சை முடிந்து வருவதற்குள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வதந்தி பரவியது. ஆனாலும் சமந்தா சொல்லியபடி வந்து மீண்டும் நடித்துக் கொடுத்தார்.

படத்தின் கதை முழுக்க பம்பாயில் நடைபெறுகிறது. ஆனால் இது தாதாக்களின் கதை அல்ல. ஆக்ஷன்கள் நிரம்பிய ஹீரோயிஸக் கதை தான். பாலிவுட் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹீரோயிஸக் கதை என்பதால் அஞ்சான் என தலைப்பு வைத்தேன்” என்கிறார் லிங்குசாமி.