தாமரைக் கண்ணனின் ‘சூறையாடல்’

sooraiyadal-movie-news

மகாராணி மற்றும் அவள் போன்ற டி.வி. சீரியல்களின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் தாமரைக் கண்ணன் த்ரிலோக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூறையாடல் படம் மூலம் இயக்குனராகிறார்.

ஸ்ரீபாலாஜி இதன் அறிமுக நாயகனாக அறிமுகமாகிறார். காயத்ரி மற்றும் லீமா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஸ்ரீபாலாஜி கூத்துப்பட்டறையில் பயின்ற மாணவர். ஜெயன், ஜாக் ஜெகன் போன்றோரும் நடிக்கின்றனர்.

“மனிதன் முக்கியமான குணங்களுக்கு அடிப்படையாக காதல் இருக்கிறது. காதலிப்பவரின் மனம் பூப்போன்றிருக்கிறது. காதலிக்காதவரின் மனமோ இரும்பு போல இருக்கிறது… இப்படி காதலை பெருமையாகப் பேசும் வரிகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஆனால் காதலுக்கும் எல்லையுண்டு. அதன் எல்லையை தாண்டும்போது காதல் சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கும். இந்த எல்லையை தாண்டாமலிருக்க, அதற்கு ஒரு தீர்வு தர இந்தப் படம் முயலுகிறது” என்கிறார் தாமரைக் கண்ணன்.

சூறையாடல் கேலரி..