தெகல்கா – ராபர்ட் டி நீரோவிடம் கேள்வி

robert-de-nero-tehelka

ஐம்பது வயதான தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் தனது நிறுவன பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் தொந்தரவு செய்தது சம்பந்தமான வழக்கில் கோவா காவல்துறை ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவிடம் கேள்விகள் கேட்டு தகவல் அனுப்பியுள்ளது.

கடந்த நவம்பரில் தெகல்கா நடத்திய சினிமா நிகழ்வின் போது இந்த பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளது. சினிமா நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த ராபர்ட் டி நீரோ, சம்பவம் நடந்த ஹோட்டலில் மற்ற விருந்தினர்களுடன் தங்கியிருந்ததாலும், அவர் அவர்களுடன் சம்பவத்துக்கு முன்புவரை பார்ட்டியில் உரையாடியிருந்ததாலும் அவரிடம் அது சம்பந்தமாக கேள்விகள் கேட்க முடிவுசெய்யப்பட்டது.

நடிகருடைய வழக்கறிஞரை அமெரிக்காவில் தொடர்பு கொண்டு இது சம்பந்தபட்ட கேள்விகளை அவருக்கு அனுப்பி அவர் மூலம் பதில்களை பெற இருக்கிறார்களாம். இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்க உள்ளது. சதா சப்ஜெயிலில் இருக்கும் தேஜ்பாலிடமும், அவரது மகள் மற்றும் சிலரிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெற்றிருக்கிறார்கள்.