vadivelu-china-news

கேப்டனுடன் ஏற்பட்ட சாதாரண தகராறில் அம்மாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்த கேப்டனை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசி அதனால் அம்மாவின் ஆட்சியில் சுமார் மூன்று வருடங்களாக சினிமா வாய்ப்புக்களே கிடைக்கப்பெறாமலிருந்த வடிவேலு, தற்போது கேப்டனே தி.மு.க.வுடன் கூட்டுச்சேர பேரம்

பேசுவதால் பிரச்சினைகள் இல்லாமல் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் மூலமாக ரீ என்ட்ரீ ஆகிறார்.

இந்த சரித்திரப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டே எடுக்கப்பட்டன. தற்போது படத்தில் வரும் ஒரு பாடல் காட்சிக்காக படக்குழு சீனா செல்ல இருக்கிறது. பாடலில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் பாடல் காட்சிக்குத் தேவைப்படுவதால் பழமை வாய்ந்த கட்டிடங்கள் கொண்ட சீனாவில் படமாக்க உள்ளனராம்.

படத்தில் கனவுக் காட்சிப் பாடலாக வரும் இந்தப் பாடலில் நடிக்க வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் மற்றும் படக்குழுவினர் இம்மாத இறுதியில் சீனா செல்கின்றனர். சீனாவின் நடனக்கலைஞர்களை வைத்து பாடலுக்கு நடனம் வடிவமைக்கப்படுகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.