கூட்டணி பற்றிப் பேசும் கம்பன் கழகம்

kamban-kalzhagam-news

தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், பாஜக என்று தனித்தனியாக அணிபிரிந்து நிற்கும் நிலையில் கூட்டணி ஆட்சிதான் மத்தியில் அமையும் என்பது மேலும் உறுதியாகியுள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்த வருவதுதான் கம்பன் கழகம்.

என்ன இது ஏதோ புதுக்கட்சியா? எனக் குழம்பிவிடவேண்டாம். ஏ.ஆர்.முருகதாஸின் மாணவர் அஷோக் ரங்கநாதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் புதிய படம்தான் கம்பன் கழகம்.

அதென்ன கம்பன் கழகம் என்று இயக்குனரைக் கேட்டோம். “எந்த ஒரு செயலானாலும் பலபேரின் கூட்டுமுயற்சியால்தான் அது சாத்தியமாகிறது. தனிநபர் தானே சாதித்ததாகக் கூறுவதில் முழுக்க உண்மையில்லை. அதைக் குறிக்கவே கம்பன் கழகம் என்கிற பெயரை வைத்தேன்

கல்லூரி வாழ்க்கை எவ்வளவு ஜாலியாகக் கழிகிறதோ அதற்கு நேர்மாறாக கல்லூரிப் படிப்பு முடிந்தபின் நிஜம் நெற்றியில் அறைந்து கஷ்டங்களை நமக்கு உணர்த்துகிறது. அப்படி இயல்பான வாழ்வில் சில இளைஞர்களுக்கு கல்லூரியின் போதும் அதன் பின்பும் ஏற்பட்ட சம்பவங்களே இப்படத்தின் கதை.” என்கிறார் அஷோக்.

க்யூ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ராய்சன், நவீன், ரத்தின்ராஜ், கிருத்திகா போன்ற புதுமுகங்கள் நிறைந்த படம் இது. கிஷோர, ஜெயப்பிரகாஷ் மற்றும் கஞ்சாக் கருப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.