பாண்டியராஜனின் ஆய்வுக்கூடம்

aaivukkoodam-movie-news

 நடிகர் பாண்டியராஜனும், பாக்யராஜூம் ஆய்வுக்கூட விஞ்ஞானிகளாயிருந்தால் எப்படியிருக்கும்? ‘3 ஜீனியஸ்’ படத்தில் பாக்யராஜ் விஞ்ஞானியாக நடித்து வருகிறார். படம் காமெடியில் களைகட்டுமாம்.

அதேபோல நடிகர் பாண்டியராஜனும் ‘ஆய்வுக்கூடம்’ என்கிற படத்தில் விஞ்ஞானியாக பாத்திரமேற்று நடிக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூளையை மாற்றி வைத்துவிட்டால் மனிதனின் குணம் மாறிவிடுமா? என்பது பற்றியது.

 ஆனால் அதற்கு அரசின் அனுமதி கிடைக்காததால் அவர் திருட்டுத்தனமாக இரண்டுபேரின் மூளையை இடம் மாற்றி வைத்துவிடுகிறார். அதன்பின் அந்த இருவரும் எப்படி நடநத்துகொண்டார்கள்? அவர்களின் குணங்கள் எவ்வாறு மாறின? என்பது போன்ற குழப்பங்களை காமெடியாகச் சொல்லியிருக்கும் படம்தான் இப்படம்.

 சத்யஸ்ரீ, கணபதி என்கிற புதுமுகங்கள் நடிக்க, புதுமுக இயக்குனர் அன்பரசன் கதை எழுதி இயக்குகிறார்.