‘சிநேகாவின் காதலர்கள்’ – ஆடியோ வெளியீடு

snehavin-kadhalarkal-muthanna

சிநேகாவின் காதலர்கள் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 20 அன்று சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. ஹலோதமிழ்சினிமா இணைய இதழின் ஆசிரியரான முத்துராமலிங்கன் ஒரு பத்திரிக்கையாளர் அத்துடன் ரமேஷ்கிருஷ்ணனின் அதர்மம் படம் துவங்கி நிறைய படங்களில் இணை இயக்குனராகப்  பணிபுரிந்த அனுபம் உள்ளவர்.

இதுதவிர குமுதம், நக்கீரன், ஸ்டார் சினிமா போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றியிருக்கிறார். சத்ரியன் என்கிற பத்திரிக்கையை நடத்தியிருக்கிறார். அவருக்கும் தயாரிப்பாளர் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயத்துக்கு மிடையேயான நட்பே இந்தப் படம் உருவாக அடிப்படையாக அமைந்தது. மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் முத்துராமலிங்கனின் கல்லூரிகாலத்திலிருந்து நண்பரும் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரும், நிறைய குறும்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்தவருமான இரா.பிரபாகர்.

முத்துராமலிங்கனின் சிநேகாவின் காதலர்கள்  ஆண்கள் நிரம்பிய யதார்த்த உலகில், சிநேகா என்னும் ஒரு இயல்பான பெண் தனது லட்சியங்களூடே பயணிக்கும்போது, அவள்மேல் அன்பு செலுத்தும், அவள் ஈர்ப்புகொள்ளும் பலரை சந்திக்கிறாள். அவள் வாழ்வில் நிகழும் விஷயங்களை ஒரு தோழியின் பார்வையில் அவளே பகிர்ந்துகொள்வதான யதார்த்தமான கதையைக் கொண்டிருக்கிறது.

தமிழன் கலைக்கூடம் வழங்கும்  ‘சிநேகாவின் காதலர்கள்’

தயாரிப்பு – கா.கலைக்கோட்டுதயம்
இசை – இரா.ப்ரபாகர்
ஒளிப்பதிவு – ஆனந்த்

படத்தொகுப்பு – ஷஜித் குமரன்

சண்டை – ஜாக்குவார் தங்கம்
புகைப்படம் – ஜெயக்குமார்
வரைகலை – டேவிட் வெஸ்லி

இணை இயக்குநர் – அந்தோனி ஜோசப்
இணை தயாரிப்பு – அமலா கலைக்கோட்டுதயம்
மக்கள்; தொடர்பு – நிகில் முருகன்

எழுத்து இயக்கம் – முத்துராமலிங்கன்

tamilan kalaikkodam presents ‘snehavin kadhalargal’

producer- ka. Kalaikkottuthayam
music- ira.Prabahar
cinematography- Anand
editing- Shyjith kumaran

dance- Balakumaran-Revathy, Sathish
stunt- Jaguar thangam
stills- Jaikumar
designs- David Wesley

co-director- Anthony Joseph
co-producr- Amala Kalaikottuthayam
PRO- Nikhil

written and directed by

Muthuramalincoln

ஆடியோ வெளியீட்டுப் படங்கள்

ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்