vishwaroopam-2-release-april

கோச்சடையான் வரு்ம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷத்தை மேலும் கக்குவதற்கு வரும் கமலின் விஸ்வரூபம்-2ம் வெளியாக இருந்ததாம்.

திரை அமைப்புகள் கூடி ஒரே நாளில் ஏன் ஒரே மாதத்தில் கூட இரு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தவுடன் அந்த நாளில் ரிலீஸ் இல்லை என்று முடிவுசெய்துவிட்டார்கள். விஸ்வரூபத்தின் ஆடியோ வெளியீட்டைகூட ஏப்ரல் 11க்குப் பின் ஓரிரு வாரங்கள் தள்ளியே வைக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்களாம்.

விஸ்வரூபம்-2வின் பஞ்சாயத்துக்கள், இஸ்லாமியரின் எதிர்ப்புக்கள், கமல் இஸ்லாமிய சகோதரர்களுக்கென்று தரும் பிரியாணி(அல்வா) என்று பரபரப்பாகச் செய்தால்தானே விஸ்வரூபம் – 2வும் விஸ்வரூபம்-1 போல ஹிட்டாகி ஓட முடியும். கமல் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து ‘ஹிந்துக்களே இஸ்லாமியர்கள் எல்லாம் பேர்பாதி (அதாவது 99%) குண்டுவைத்துக் கொல்லும் நயவஞ்சகர்கள் அதில் கமல் மாதிரி ஒருத்தர் மட்டும் நல்ல ஹீரோ’ என்று படமெடுத்தால் தானே நாலு காசும் (சுமார் 400 கோடி?) அரசிடமிருந்து நாலு பத்ம விபூஷண்களும் வாங்கிக்கொள்ள முடியும்.

எனவே விஸ்வரூபம்-2 மேமாதம் தான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.