கணவருக்கு 2ஆம் வாய்ப்பு தரும் ஹிலாரி

hilary-duff-mike-comrie

ஹாலிவுட்டில் பிரபலமான பாடகியும் நடிகையுமான ஹிலாரி டப்(Hilary Duff) கடந்த ஜனவரி 10ம் தேதி தனது கணவரான மைக் காம்ரியிடமிருந்து இணக்கமான முறையில் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார். ஹிலாரி டப் ‘ஸோ யெஸ்டர்டே'(So Yesterday), ‘கமிங் வித் க்ளீன்'(Coming with clean) என்கிற அவரது பாப் பாடல்களின் மூலம் பிரபலமானவர். நிறைய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2010ஆம் வருடம் கனடா நாட்டைச் சேர்ந்த ஐஸ் ஹாக்கி வீரர் மைக் காம்ரியை(Mike Comrie) காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு லூக்கா க்ரூஸ் என்கிற 2 வயது மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரிந்து வாழப்போவதாகவும், ஆனால் மகனை இருவரும் சேர்ந்து வளர்க்கப்போவதாகவும் கூறினார்.

இந்தப் பிரிவு அறவிப்பைத் தொடர்ந்து அவரது முன்னாள் ஆண் நண்பரும், பேக்ஸ்டிரீட் பாய்ஸ் பாப் குழுவின் பாடகருமான ஆரோன் கார்ட்டர் ட்வீட்டரில் தான் ஹிலாரியை காதலிப்பதாகவும் தனது இழந்த சொத்துக்களை எல்லாம் அடைந்து, நல்ல இடத்திற்கு வந்து அவரை மீண்டும் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

இப்போது தனது கணவர் மிகவும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதாலும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார் ஹிலாரி. அட பரவாயில்லையே !