சி.ஐ.டி அஜித்

ajith-plays-cid-news

கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது தெரிந்ததே. இப்படத்தில் சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறாராம் அஜித். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அஜித்.

புலனாய்வுக் கதையான இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என்ற பெயர் வைக்கலாமா என்று யோசித்துவருகிறார்களாம். இதற்கு திரைக்கதை எழுத வெற்றி பெற்ற பல இந்திப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஸ்ரீதர் ராகவனை அழைத்திருக்கிறார்களாம்.

அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாகவும், விவேக் காமெடியானகவும் நடிக்கிறார்கள். கமலை வைத்து கௌதம் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ வைப் போல பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது அஜீத்-கௌதம் இணையும் இந்தப் படம்.