தீபிகாவிடம் தவம் கிடக்கும் கிங் ஃபிஷர்

deepika-padukone-siddharth-news

ஜல்சாப் புகழ் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவும் தீபிகா படுகோனேயும் காதலித்து வந்தார்களாம். கடைசியில் கிப் ஃபிஷருக்கு மஞ்சக் கடுதாசி நோட்டீஸ் கொடுத்துவிட்டு நஷ்டக் கணக்கு முழுவதையும் அரசின் தலையிலும் அதாவது மக்களின் வரிப்பணத்திலும் கட்டிவிட்டு நைஸாக

எஸ்கேப் ஆகிவிட்டு இன்னும் ஜாலியாக தனது பண சாம்ராஜ்யத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மல்லையாவின் மகனும் மஞ்சக் கடுதாசிகள் கொடுப்பதில் கில்லாடி என்பதை தெரிந்துகொண்டார் தீபிகா. எனவே காதலை ரத்து செய்துவிட்டார்.

சமீபத்தில் தான் நடித்த படத்தில் டப்பிங் பேச ஸ்டுடியோவுக்கு தீபிகா வந்திருப்பதை தெரிந்துகொண்ட சித்தார்த் மல்லையா டப்பிங் தியேட்டருக்கே வந்துவிட்டாராம். அவருடன் பேசிவிட டப்பிங் தியேட்டர் வாசலிலேயே காத்திருந்த சித்தார்த்தை டபாய்த்துவிட்டு வேறொரு வழியாக எஸ்கேப்பாகிவிட்டாராம் தீபிகா.

பணத்தாலேயே எதையும் அடிக்கும் சித்தார்த் மல்லையா இந்த விஷயத்தையும் பணத்தால் அடிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.