ஹாலிவுட்டில் கேட்கும் தமிழ்ப் பாட்டு

rahman-tamil-song-hollywood

ஆஸ்கர் விருது விழா மேடையில் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே…  என்ற வாக்கியத்தை உச்சரித்து தமிழினத்தையே பெருமைப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான். இப்போது லேட்டஸ்ட்டாக வரவிருக்கும் ஒரு ஹாலிவுட் ஆங்கிலப் படத்தில் தனது தமிழ்ப் பாடல்

ஒன்றை அப்படியே தமிழ் வரிகளோடே இணைத்திருக்கிறார்.

அந்தப் படத்துக்குப் பெயர் ‘மில்லியன் டாலர் ஆம்’. இந்தப் படத்தின் ஒரு காட்சிக்கு, தான் 15 ஆண்டுகளுக்கு முன் இசையமைத்த என் சுவாசக் காற்றே என்ற படத்தில் வரும்  ‘திறக்காத கூட்டுக்குள்ளே பிறக்காத’  என்ற பாட்டை அப்படியே போட்டிருக்கிறாராம்.  இதுகுறித்து ஏ ஆர் ரஹ்மான் கூறுகையில், “இந்தப் படக்குழுவினர் இந்தியப் படங்களுக்கு நான் அமைத்த இசை, பாடல்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறார்கள். பாடல் வரிகள் புரியாவிட்டாலும், படத்தில் வரும் ஒரு சூழலுக்கு இந்த இசை பொருத்தமாக இருந்ததால் பயன்படுத்த விரும்பினர்.

ஆனால் படத்தில் வரும் சூழலுக்கேற்பவே பாடல் வரிகளும் அமைந்ததால், அந்த தமிழ்ப் பாடலை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தியுள்ளோம். படத்தில் பார்த்தபோது இன்னும் சிறப்பாக இருந்தது,” என்றார். ஹாலிவுட் படக் காட்சியொன்றில் தமிழ்ப் பாடல் இடம்பெறுவது இதுவே முதல் முறை.