விஷ்ணுவர்தனின் யட்சன்

yatchan-vishnu-news

விஷ்ணுவர்த்தன் யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் யட்சன். படத்தில் இன்னொரு ஹீரோவாக கழுகு கிருஷ்ணா நடிக்கிறார்.

படம் குறித்து விஷ்ணுவர்த்தன் – “யட்சன் என்பதன் பொருள் இயக்குபவன் என்பதாகும். உலகையே இயக்கும் சக்தி இறைவனுக்குண்டு என்பது நம்பிக்கை. ஆனால் தனிப்பட்ட இடங்களில் நடைபெறும் செயல்களை இயக்கும் சக்தி தனிமனிதனிடமே இருக்கிறது. அப்படி தனிமனிதன் ஒருவன் சூழ்நிலையை இயக்குபவனாக மாறுவதைப் பற்றிய கதையே யட்சன்.

வழக்கமாக எனது படங்களில் இருக்கும் ஆக்ஷன், காதல், த்ரில்லர், நகைச்சுவை போன்ற விஷயங்கள் எல்லாம் இப்படத்திலும் உண்டு. முதன் முறையாக தயாரிப்பாளராகவும் ஆக இருக்கிறேன். பெரிய நிறுவனமான யு.டி.வி நிறுவனத்துடன் இணைய முடிந்தது எனக்கு நல்ல வாய்ப்பே.”

படத்தின் ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். கலை இயக்குனர் லால்குடிஇளையராஜா. படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பித்துவிட்டன.