கன்னடத்தில் லட்சுமிராய்

lakshmi-rai-acts-kannada

நீண்ட நாட்களாக சினிமாவில் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் நடிகைகளில் ஒருவராக லட்சுமிராய் இன்னும் இருக்கிறார். இவரது தமிழ், தெலுங்கு, மலையாள மார்க்கெட்டுக்கள் டல்லடித்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஒரு படம் கிடைத்திருக்கிறது. வி.நாகேந்திர பிரசாத்

இயக்கும் ‘ஸ்ருங்கார ராமா’ படத்தில் ரவிச்சந்திரனுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் லட்சுமிராய்.
லட்சுமிராய் ஏற்கனவே ‘வீரப்பன் அட்டகாசா’ (என்னது.! வீரப்பன் அட்டகாசமா?) , கல்பனா போன்ற கன்னடப் படங்களில் சிறு வேடங்களில் தோன்றியுள்ளார். இப்போது தான் முழுப்படத்திலும் வரும் வேடத்தில் நடிக்கிறார்.
“எனக்கு கன்னடப்படங்களில் நடிக்க ஆசையிருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பிஸியாக நடித்த காலங்களில் இதற்கு வாய்ப்பு கிட்டவேயில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. ஸ்ருங்கார ராமா குடும்ப உறவுகள் பற்றிய ஒரு நல்ல படம். இனி வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிப்பேன்” என்று கூறுகிறார் லட்சுமிராய்.