மிஷ்கினின் பிசாசு

mysskin-pisasu-news

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் பாலா அவரை மிகவும் பாராட்டினாராம். அத்தோடு தனது பி ஸ்டுடீயோஸில் மிஷ்கினுக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்.

வணிக நோக்கம் பற்றிக் கவலையில்லை. நல்ல சினிமாவை தமிழில் கொண்டு வந்தோம் என்கிற மனத் திருப்தி வேண்டும். எனவே வணிக நோக்கில் இது ஓடுமா ஓடாதா என்று கவலைப்படாமல் நல்ல கதையை உங்களது நேர்த்தியான ஸ்டைலில் உருவாக்குங்கள் என்றுவிட்டாராம்.

போன மாதமே ஷூட்டிங்கும் ஆரம்பித்துவிட்டார் மிஷ்கின். படத்தின் பெயர் பிசாசு. ஓ.ஆ.குட்டி போல இதுவும் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். நடிக நடிகைகள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.