samantha-pranitha-friendhsip

தெலுங்கில் டாப் இடத்தில் இருக்கும் சமந்தா மலையாளம், கன்னட மொழிகளில் இன்னும் நடிக்காவிட்டாலும் அவருக்கு சவுத் ஏஞ்சல் என்று செல்லப்பெயர் அங்கே நிலவிவருகிறது.

மலையாளத்தில் பகத் பாசிலுடன் நடிக்க ஒப்பந்தமாயிருந்தும் கால்ஷீட் ஒதுக்கவே முடியவில்லையாம் சமந்தாவுக்கு. கன்னடத்திலும் அவருக்கு நல்ல டிமாண்ட். காரணம் அவர் நடித்த படங்கள் எல்லாம் கன்னடத்திலும், மலையாளத்திலும் பெரும் வசூல்களை அள்ளுவதுதான்.

படவாய்ப்புக்கள் வந்து தன்னால் நடிக்க முடியாமல் போகும் படங்களை இவர் தனது நெருங்கிய தோழியான சகுனி ப்ரணீதாவுக்கு சிபாரிசு செய்கிறாராம். அந்தாரின்டிக்கி தரேதி என்கிற தெலுங்குப் படத்தில் சமந்தாவுடன் ப்ரணீதா இரண்டாவது நாயகியாக நடித்தாராம். அப்போதிருந்து தோழியான ப்ரணீதாவுக்கு படவாய்ப்புக்கள் இல்லாதபோது சமந்தா வாய்ப்பு கேட்டு உதவி செய்கிறார். தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா நடிக்கும் ‘ரபாஷா’ படத்திலும் இரண்டாவது நாயகி ப்ரணீதாவே.

தன்னைத் தவிர வேறு யாரும் ஸ்டாராகிவிடக் கூடாது என பொறாமைகள் நிறைந்த சினிமா உலகில் சமந்தாவின் இந்த நட்புக்காக நல்லது செய்யும் நல்ல மனசை சமத்துக்குட்டி சமந்தாவின் அகில உலக(?) ரசிகர் மன்றம் சார்பாக நெஞ்சாற வாழ்த்துக்கிறோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.