yamaleela-2-news

தெலுங்கில் 1994ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் ‘எமலீலா’. இருபது வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள். எமலோகத்தில் எமன், சித்திரகுப்தன் மற்றும் தவறாக உயிரெடுக்கப்பட்ட மானிடர்கள் சிலர் என்ற கற்பனையை

நகைச்சுவையாகச் சொல்லும் படம் இது. தமிழிலும் சிவாஜி நடித்த ‘எமனுக்கு எமன்’ , பிறகு ரஜினி நடித்த அதிசயப்பிறவி, கார்த்திக் நடித்த படம் என்று பல படங்கள் இந்த டைப்பில் உண்டு.
எமலீலாவில் எமனாக நடித்த சத்யநாராயணாவுக்குப் பதில் இப்போது மோகன்பாபு எமனாக நடிக்கிறார். சித்திரகுப்தனாக பிரேமானந்தம் நடிக்க இருக்கிறார். பழைய எமலீலாவில் சித்திரகுப்தனாக நடித்தவர் படத்தின் இயக்குனர் கிருஷ்ணரெட்டி.
இவர்கள் தவிர கே.வி.சதீஷ், தியா நிக்கோலஸ் மற்றும் ஒரு புதுமுக காதல் ஜோடிகள் நடிக்கிறார்கள். எமலீலாவின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் விரும்புவார்களா? என்று நினைத்துக் கொண்டிருந்த படக்குழுவினர் யூட்யூபில் வெளியிடப்பட்ட படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனராம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.