உதயமாகிறது டோலிங்காவுட்

rafi-telengana-asso

தமிழ்நாட்டில் கோலிவுட், வடக்கே பாலிவுட், போல தெலுங்கு சினிமாவை டோலிவுட் என்பார்கள். ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் தனியாகப் பிரிந்ததையடுத்து இப்போது ஆந்திர திரையுலகமும் இரண்டாகப் பிரிந்துள்ளது.

தெலங்கானா சினிமா புரொடக்ஷன்ஸ் பர்ம் என்கிற பெயரில் தெலங்கானா சினிமா சங்கத்தைத் தொடங்கவிருக்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான ரஃபி. தெலுங்கானாவில் பணிபுரியும் திரைப்படத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்க இந்தச் சங்கம் பாடுபடும் என்று கூறுகிறார். ஆந்திரா சினிமாபோல அல்லது தெலுங்கான சினிமா தனக்கேயுரிய தனி பாணியில் தெலங்காணாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த செயல்படும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதெல்லாம் சரிதான். மற்ற எந்தத் துறையிலும் ஒரு துறையில் வேலைவாய்ப்பின்றி அலைவோர் மற்றொரு துறையில் நுழைந்துகொள்வது எளிது. ஆனால் இந்த சினிமா சங்கங்கள் தங்களுடைய தொழிலாளர்களைப் பாதுகாக்கிறோம் பேர்வழி என்று பொருத்தமேயில்லாத வகையில் சினிமாவின் தயாரிப்புச் செலவுகளை ஊதிப் பெரிதாக்குவதும், மேலும் பல தொழிலாளர்கள் உள்ளே எளிதில் நுழைந்துவிடாதபடி பெரும் உறுப்பினர் சந்தா பணத்தொகை வசூலிப்பதும் என் இருக்கும்போது சினிமாத்துறை எப்படி வளரும்?