விஜய் அவார்ட்ஸ கூத்துக்கள்

vijay-tv-awards-news

விஜய் டி.வி.க்காரர்கள் தங்களது சேனல் ஆட்களையே வேறொரு புரொக்ராமுக்கு கெஸ்ட்டாக கூப்பிட்டு அந்த புதிய புரோக்ராமையும் ஹிட்டாக்கும் டெக்னிக்கை அறிமுகப்படுத்தியவர்கள். வழக்கம்போல இந்த வருடம் நடந்த விஜய் அவார்ட்ஸ் விழாவில் தாங்கள் கைவசம் வாங்கி வைத்திருக்கும்

படங்களுக்கு அவார்ட்களை கொடுத்துத் தள்ளினார்கள். இது எல்லா சேனல் அவார்டுகளிலும் நடக்கும் கூத்துதான்.

ராமுக்கும் விஜய் டி.விக்கும் என்ன உட்கட்சிப் பூசலோ தெரியவில்லை. சிறந்த படமாக தங்கமீன்கள் விருது வழங்கப்பட, அதை வாங்க மேடைக்கு வந்தார் ராம். வந்தவரிடம் விழாவை நடத்திய கோபிநாத் அவரிடம் விருது பற்றி வழக்கமான கேள்விகளைக் கேட்க, ‘ஏன் படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் வழங்கப்படவில்லை?’, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் சிறந்த பாடல்களின் நாமினி லிஸ்ட்டிலேயே இல்லையே! அது அவ்வளவு தரம் கெட்ட பாடலா?’ என்று மேடையிலேயே படபடவென பொரிந்தார் ராம். அரங்கமே அமைதியானது. பின்பும் விடாமல் அந்தப் பாடலை ஒளிபரப்புங்கள் என ராம் கேட்க, கோபிநாத் அப்பாடல் இல்லையென்று நினைக்கிறேன் என்று சமாளிக்க, விடாமல் ‘யாராவது பாடுங்கள்’என்று கேட்க கடைசியில் ஆடியன்ஸில் ஒருவர் அப்பாடலைப் பாடி ஒருவாறாக நிலைமையை சமாளித்தார்கள்.

அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கைதட்ட ஆரம்பித்தனர். சுமார் ஆறு நிமிடங்கள் கைதட்டல் ஓயவில்லையாம். இது போதாதென்று அஜித் – விஜய் ரசிகர்களுக்கிடையே வெட்டிச் சண்டையை கிளப்பிவிடும் விதமாக, விருது வாங்க வந்த நடிகர் விஜய் ‘தல’க்கணம் கூடாது என்று சிலேடையாக பேசிவிட்டுப் போனார்.

டி.வி.க்களின் டாக் ஷோக்களுக்குள்ளும், சூப்பர் சிங்கர், ‘சொல்வதெல்லாம் புளுகு’ போன்ற ரியலிட்டி ஷோக்களுக்கும் அடிமையாகிப் போன ரசிகர்களுக்கு இந்த மாதிரி ‘அவல்’களும் கிடைப்பதில் சந்தோஷம் தான்.