என்னால் அரசியல்வாதியாக முடியாது – ஷாருக்கான்

sharuk-khan-no-politics

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷாருக்கானிடம் ‘தமிழ்நாட்டில் திரையுலகில் இருப்பவர்கள் தான் அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அதுபோல நீங்கள் ஏன் அரசியலில் குதிக்கக்கூடாது?’ என்று கேட்டதற்கு அவர்.

“நீங்கள் நினைப்பதுபோல அது அவ்வளவு எளிதானதல்ல. தமிழச் சினிமாவில் எல்லோரும் அரசியலுக்குள் வந்தார்களா என்ன? இல்லையே. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததும் கூட. ஹிந்தி நடிகர்கள் இந்தியா முழுதும் செல்வாக்கு பெற்றவர்கள் இல்லை. ஹிந்தி தேசியமொழி என்கிறார்கள். மூணாறில் படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். அங்கு யாருக்கும் ஹிந்தி தெரியவில்லை. இந்தியா முழுவதும் ஹிந்தி பேசுவார்கள் என்பது சரியானதல்ல.

ஹிந்தி பேசும் ஊர்களிலும் மஹாராஷ்டிராவில் நான் தேர்தலில் நின்றால் டெல்லிக்காரன் என்று ஒதுக்குவார்கள். டெல்லியில் போட்டியிட்டால் மும்பைக்கு நடிக்கப் போய்விட்ட இவன் நம்ம ஆள் இல்லை என்பார்கள். தமிழ்நாட்டில் என்னை ஹிந்திக்காரன் என்பார்கள். பிரபலமாக இருப்பது மட்டும் அரசியலுக்கு வரும் தகுதியல்ல.

எனக்கு 47 வயதாகிறது. என்னால் எப்படி இனி சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகமுடியாதோ, அதேபோலத் தான் ‘என்னால் அரசியல்வாதியாகவும் ஆகமுடியாது. முக்கியமாக நாடளுமன்றத்தில் ஒளிந்துகொண்டு சிகரெட் பிடிக்கமுடியாது.”